
அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை ஐந்து ஆண்டுகள்
உயர்த்தி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப்
விஜய் இன்று (30.10.2026) உத்தரவிட்டுள்ளார்.
போட்டித் தேர்வர்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய விதிகளில் உள்ள வயது வரம்பைவிட 5 ஆண்டுகள் கூடுதலாக உயர்த்தப்படுகிறது.
இடஒதுக்கீட்டுப் பிரிவினரான BC, BC(M), MBC & DNC, SC, ST மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு ஏற்கெனவே உள்ள வயதுச்
சலுகையுடன் இந்த உயர்வு கூடுதலாகச் சேரும்.
உயர்த்தப்பட்ட வயது வரம்பு (எடுத்துக்காட்டாக)
|
தேர்வு / பிரிவு |
பொதுப் பிரிவினர் |
ஒதுக்கீட்டுப் பிரிவினர் |
மாற்றுத்திறனாளிகள் (பொது) |
மாற்றுத்திறனாளிகள் (ஒதுக்கீடு) |
|
குரூப்-I |
32 → 37 |
37 → 42 |
42 → 47 |
47 → 52 |
|
குரூப்-II & II-A |
30 → 35 |
உச்ச வயது வரம்பு இல்லை |
40 → 45 |
உச்ச வயது வரம்பு இல்லை |
|
குரூப்-IV (உயர்கல்வித் தகுதி உடையோர்) |
30 → 35 |
உச்ச வயது வரம்பு இல்லை |
40 → 45 |
உச்ச வயது வரம்பு இல்லை |
|
குரூப்-IV (உயர்கல்வித் தகுதி இல்லாதோர்): BC, BC(M), MBC & DNC |
30 → 35 |
32 → 37 |
40 → 45 |
42 → 47 |
|
குரூப்-IV (உயர்கல்வித் தகுதி இல்லாதோர்): SC, ST, ஆதரவற்ற விதவை |
30 → 35 |
35 → 40 |
40 → 45 |
45 → 50 |
இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் ஐந்து ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும்.
தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவால், வயது வரம்பு
முடிவடையும் நிலையில் இருந்த பல்லாயிரக்கணக்கான போட்டித் தேர்வர்களும் இளைஞர்களும்
பெருமளவில் பயனடைவர்.
(செய்தி வெளியீடு எண்: 941; வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9)
கருத்துகள் (0):
Post a Comment