நேரடியாக முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

பேசும் படம்

graphic: வெயிலான வானத்தின் கீழ், பெரிய பள்ளத்தின் விளிம்பில் சாய்ந்த நிலையில் ஒரு மஞ்சள் நிற பேருந்து நிற்கிறது. பேருந்தின் மீது “பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகள்” என்றும், கீழே “சேருமிடம்: எதிர்காலம்” என்றும் எழுதப்பட்டுள்ளது. பேருந்துக்குள் பல குழந்தைகள் காணப்படுகின்றனர். சிலர் வெண்கோல்கள் பிடித்துள்ளனர்; மேலும் சிலர் பிரெயில் புள்ளிகள் பதிக்கப்பட்ட பலகைகளை கையில் வைத்துள்ளனர். பேருந்தின் முன்பகுதியில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருக்கைகள் காலியாக உள்ளன. அருகிலுள்ள ஒரு பலகையில் “74-கு 6” என்று எழுதப்பட்டுள்ளது. சில முன்பக்க ஜன்னல்கள் உடைந்துள்ளன. ஒரு குழந்தை, “யாராவது இருக்கிறீங்களா?” என்று கத்துவதுபோல் உள்ளது. பள்ளத்தின் அருகில் “சிக்கி...” என்றும், படத்தின் கீழே “இன்னும் நேரம் இருக்கிறது... காப்பாற்றுங்கள்!” என்றும் எழுதப்பட்டுள்ளது.
***அகவண்ணன்
_____
அன்பார்ந்த தொடுகை மின்னிதழ் வாசகர்களே!
உங்களுக்கும் இதுபோல படத்தின் மூலம் ஏதேனும் சிந்தனைகளைச் சொல்ல வேண்டுமா? உடனே முயன்று உரிய விளக்கத்துடன் உங்கள் படங்களை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். "என்னால் படத்தை உருவாக்க இயலவில்லை, ஆனால், சிந்தனைகள் இருக்கின்றன" என்பவர்கள் உங்கள் சிந்தனையை எங்களுக்கு குரல்ப்பதிவாகவோ, அல்லது சிறிய எழுத்துப் பதிவாகவோ மின்னஞ்சல் செய்யலாம். கருத்துச் செறிவுமிக்க, ஆழமான சிந்தனையைத் தாங்கிய படங்கள் பேசும் படங்களாகத் தொடுகை மின்னிதழில் உங்கள் பெயருடன் இணைத்து வெளியிடப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thodugai@gmail.com
www.thodugai.in

கருத்துகள் (0):

Post a Comment

தளத்தின் மேலே செல்ல