தமிழகம்
அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 புதிய இல்லங்கள்
வெளியான தேதி: 13 நவம்பர் 2026
தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்களைத் தொடங்க ரூ.1.77 கோடி ஒதுக்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி, வட சென்னை, திருவண்ணாமலை, சிவகங்கை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இவை செயல்படும்; ஒவ்வோர் இல்லத்திலும் 40 பேர் தங்கலாம்.
இந்தியா
பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரியின் இடமாற்ற உத்தரவு ரத்து
வெளியான தேதி: 11 நவம்பர் 2026
இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி பிராஞ்சல் பாட்டிலை டெல்லியிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்கு மாற்றிய உத்தரவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்து செய்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான “நியாயமான வசதி” என்ற கடமை, வழக்கமான இடமாற்ற வழிகாட்டுதல்களை விட முக்கியம் என்று தீர்ப்பாயம் கூறியது.
அயோத்தி ராமர் கோவிலில் பார்வையற்றோருக்கான பிரெயில் வசதி
வெளியான தேதி: 9 நவம்பர் 2026
பார்வைக் குறைபாடுடைய பக்தர்கள் சுயமாக வழியறிந்து செல்ல உதவும் வகையில், சுமார் 800 மீட்டர் தொலைவுக்குத் தொட்டு உணரக்கூடிய, பிரெயில் வசதியுடைய பலகைகள் அமைக்கும் திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்தது.
டிஜிட்டல் அணுகல் விதிகள்:
தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் புதிய சவால்
வெளியான தேதி: 12 நவம்பர் 2026
இணையதளங்கள், செயலிகள், மென்பொருள்களுக்கு வலுவான அணுகல் தேவைகளை முன்மொழியும் வரைவு மாற்றுத்திறனாளிகள் உரிமை விதிகள் 2026-ஆல், நிறுவனங்கள் தங்கள் பழைய மென்பொருளை மறுவடிவமைக்க வேண்டி வரும். இவை இன்னும் வரைவு நிலையிலேயே உள்ளன.
கேரளாவில் “தடைகள் இல்லை” திட்டம்
வெளியான தேதி: 12 நவம்பர் 2026
நாட்டிலேயே முதல் முறையாகச் செயல்படுத்தப்படும் ‘No Barriers’ திட்டம் இந்த மாதம் தொடங்கும் என்றும், விரிவான மாற்றுத்திறனாளிகள் கொள்கை விரைவில் வெளியாகும் என்றும் முதல்வர் வி.டி. சதீசன் அறிவித்தார். திருவனந்தபுரத்தில் நவம்பர் 12 முதல் 15 வரை நடக்கும் இலவச செயற்கை உறுப்பு முகாமில், கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 400 பேர் பயனடைவர்.
பார்வையற்றோர் கிரிக்கெட் ஆசியக் கோப்பை: இந்திய அணி வழியனுப்பி வைக்கப்பட்டது
வெளியான தேதி: 12 நவம்பர் 2026
வங்கதேசத்தின் டாக்காவில் நவம்பர் 15 முதல் 20 வரை நடக்கும் போட்டிக்குப் புறப்படும் இந்திய அணிக்கு டெல்லியில் வழியனுப்பு நிகழ்ச்சி நடந்தது. BCCI விமானப் பயணச் செலவை ஏற்றுள்ளது; இந்தியா 15-ஆம் தேதி இலங்கையை எதிர்கொள்கிறது.
பார்வைத்திறன் குறையுடையோர் எனப் போலிச் சான்றிதழ்: மருத்துவப் படிப்பில் சேர முயன்ற ஆறு பேர் பிடிபட்டனர்
வெளியான தேதி: 13 நவம்பர் 2026
காஷ்மீரில், பார்வைத்திறன் குறையுடையவர்கள் எனப் போலிச் சான்றிதழ் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஆறு பேர் சிக்கினர். அவர்கள் அனைவருமே நூறு விழுக்காடு பார்வையுடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் தவறுதலாக ஏறிய பெண்ணுக்கு நடந்த சோகம்: ஒரு கை துண்டிப்பு, தலையில் பலத்த காயம்
வெளியான தேதி: 12 நவம்பர் 2026
மும்பை புறநகர் ரயிலின் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் தவறுதலாக ஏறிய 20 வயதுப் பெண்ணைச் சீண்டியவரோடு ஏற்பட்ட வாக்குவாதத்தில், அந்தப் பெண் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டார். இதில் அவரது இடது கை துண்டிக்கப்பட்டது; குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.1,100 மாதாந்திர ஓய்வூதியம்: ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு விடுவித்தார் முதல்வர்
வெளியான தேதி: 10 நவம்பர் 2026
பிஹாரில் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியமாக, ரூ.1,100 வீதம் ரூ.1,205 கோடியை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முதல்வர் விடுவித்தார்.
“மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக
நீதிமன்றங்கள் விளங்குவதை உறுதிசெய்ய வேண்டும்”: மனித உரிமைகள் ஆணையர் கடிதம்
வெளியான தேதி: 11 நவம்பர் 2026
நீதிமன்றங்கள் மாற்றுத்திறனாளிகள் அணுகத் தக்க வகையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என மனித உரிமைகள் ஆணையர், நீதியரசர் A.S. ஆனந்த், அனைத்து உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
உலகம்
வான்கூவர் விமான நிலையத்தில் அணுகல்தன்மை பயண ஒத்திகை
வெளியான தேதி: 7 நவம்பர் 2026
கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில், 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பதிவு, பாதுகாப்புச் சோதனை, விமானம் ஏறுதல் ஆகியவற்றை முன்கூட்டியே அனுபவிக்கும் பயண ஒத்திகை நடந்தது. இதில் வழிகாட்டி நாய்களுடன் பயணம் செய்வதும் இடம்பெற்றது.
இங்கிலாந்து: மாற்றுத்திறனாளிகளின் உதவிகளைக்
குறிவைக்கும் ஏழு நடவடிக்கைகள்
வெளியான தேதி: 12 நவம்பர் 2026
ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு £36 பில்லியன் சமூகப் பாதுகாப்புச் செலவைக் குறைப்போம் என்ற கன்சர்வேடிவ் கட்சியின் திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளைக் குறைக்கும் ஏழு நடவடிக்கைகள் உள்ளதாக ஒரு பகுப்பாய்வு கூறுகிறது.
அமெரிக்கா: சிறப்புக் கல்விச் சர்ச்சைகளில் AI உதவியை நம்புவோருக்கு எச்சரிக்கை
வெளியான தேதி: 10 நவம்பர் 2026
சிறப்புக் கல்விச் சர்ச்சைகளில் செயற்கை நுண்ணறிவு வழிகாட்டுதலை நம்பும் குடும்பங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் (0):
Post a Comment